/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அளவையர் 'ஆப்சென்ட்'; பொதுமக்கள் 'அப்செட்' அளவையர் 'ஆப்சென்ட்'; பொதுமக்கள் 'அப்செட்'
அளவையர் 'ஆப்சென்ட்'; பொதுமக்கள் 'அப்செட்'
அளவையர் 'ஆப்சென்ட்'; பொதுமக்கள் 'அப்செட்'
அளவையர் 'ஆப்சென்ட்'; பொதுமக்கள் 'அப்செட்'
ADDED : ஜூன் 20, 2024 04:56 AM
பொங்கலுார் : கோர்ட் உத்தரவின் பேரில் குட்டையில் அமைந்துள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியை அளவீடு செய்ய அளவையர் வராததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, பொங்கலுார், வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. குட்டையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது; விதிமுறைப்படி அமைக்கவில்லை என்று பொதுமக்கள், விவசாயிகள், தொழில் துறையினர், சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று குட்டை பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அளவீடு செய்ய அளவையர் வருவதாக இருந்தது. இதனால், காலை முதல் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், மாலை வரை அளவையர் வராததால் பொதுமக்கள் ஏமாற்றுடன் திரும்பி சென்றனர்.
சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளேன். கோர்ட் உத்தரவின் அடிப்படையில் அளவீடு செய்ய திருப்பூர் தெற்கு நில அளவையர் வருவதாக தெரிவித்து இருந்தார்.
இதனால், பலரும் காலை முதல் மாலை வரை காத்திருந்தோம். ஆனால், அளவையர் ஆகியோர் வருவதாக தெரிவித்தும் மாலை வரை வரவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றோம். கோர்ட் உத்தரவை மதிக்காமல் வேலை செய்ய மறுக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.