/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் கட்டண உயர்வு எம்ப்ராய்டரி 'லேஸ்' மின் கட்டண உயர்வு எம்ப்ராய்டரி 'லேஸ்'
மின் கட்டண உயர்வு எம்ப்ராய்டரி 'லேஸ்'
மின் கட்டண உயர்வு எம்ப்ராய்டரி 'லேஸ்'
மின் கட்டண உயர்வு எம்ப்ராய்டரி 'லேஸ்'
ADDED : ஜூன் 20, 2024 04:54 AM
திருப்பூர் : சிறு, குறு தொழில்களின் நிலை சீராகும் வரையில், மின் கட்டண உயர்வுகளை நிறுத்தி வைக்க வேண்டுமென, தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மின் கட்டண உயர்வு, ஒட்டு மொத்த சிறு, குறு தொழில்களை பதம்பார்த்துவிட்டது. தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், 'பீக் ஹவர்' கட்டணம் விதித்தது, குறுந்தொழில்களை முடக்கிவிட்டது.
மின் நிலை கட்டணத்தை, 420 சதவீதம் அளவுக்கு அதிகரித்ததால், ஒவ்வொரு நிறுவனங்களின் மின் கட்டணமும் எகிறிவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்ற குமுறிய தொழில்துறையினர், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு என்ற பெயரில் இணைந்து போராடினர்.
தமிழக முதல்வரை சந்தித்த போது, லோக்சபா தேர்தலுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்தார்; அதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது மின் கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு குறைக்கப்பட்டால், தொழில்கள் ஏற்றம் பெறும் என்கின்றனர் தொழில்துறையினர்.