ADDED : ஜூன் 21, 2024 02:01 AM

திருப்பூர்;திருப்பூர், எஸ்.ஆர்., நகர் வடக்கு பகுதியில், விநாயகர் கோவில் பிரதான சாலையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியாமல் இருந்தன.
இதனால், இரவில் இருள் சூழ்ந்திருந்ததால், பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், மின் விளக்குகளை மீண்டும் எரியச் செய்தனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.