ADDED : ஜூன் 21, 2024 02:01 AM

திருப்பூர்;திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்தால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அந்த ஓட்டல் அரங்கில், நேற்று நடந்த ஒரு கூட்டத்துக்கு பின், கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஓட்டலில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோகிலா என்பவருக்கு பரிமாறப்பட்ட உணவில், சாம்பாரில் கரப்பான் பூச்சி இறந்து கிடப்பது தெரிய வர, அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதை பார்த்த, அருகே உணவருந்திக் கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டல் நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது