/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வருமுன் காப்போம் ; சிறப்பு மருத்துவ முகாம் வருமுன் காப்போம் ; சிறப்பு மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் ; சிறப்பு மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் ; சிறப்பு மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் ; சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 28, 2024 12:19 AM
அவிநாசி;சேவூர் வட்டாரம், நம்பியாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 'வருமுன் காப்போம்' சிறப்பு மருத்துவ முகாம் தெக்கலுார் துவக்கப்பள்ளியில் நடந்தது.
ஊராட்சி தலைவர் மரகதமணி தலைமை தாங்கினார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் பாலாமணி வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், ரத்த அழுத்தம், பெண்களுக்கு மகப்பேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவர் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாம், ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் பரமன், லிவிங்ஸ்டன், சமுதாய நலசெவிலியர் தனலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.