/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மகிழ்ச்சி இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மகிழ்ச்சி
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மகிழ்ச்சி
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மகிழ்ச்சி
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி மகிழ்ச்சி
ADDED : ஜூலை 28, 2024 12:18 AM

திருப்பூர்;இயற்கை விவசாயம் தொடர்பாக, ஒரு கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று, கொங்கு நாடு விவசாயிகளின் கட்சி மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
அதன் மாநில தலைவர் கொங்கு முருகேசன்கூறியதாவது:
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கு இந்த முறை 1.52 லட்சம் கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும். இயற்கை விவசாயம் சம்பந்தமாக ஒரு கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும், விவசாயத்தை டிஜிட்டல் மயமாக்கும் அறிவிப்புகளும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான அறிவிப்பும் வெளியாகி இருந்தால், நம்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.