/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பெருமாநல்லுார் பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் ஆகஸ்டில் கும்பாபிேஷகம் பெருமாநல்லுார் பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் ஆகஸ்டில் கும்பாபிேஷகம்
பெருமாநல்லுார் பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் ஆகஸ்டில் கும்பாபிேஷகம்
பெருமாநல்லுார் பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் ஆகஸ்டில் கும்பாபிேஷகம்
பெருமாநல்லுார் பெருமாள், ஈஸ்வரன் கோவில்களில் ஆகஸ்டில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 18, 2024 12:28 AM

அனுப்பர்பாளையம்;பெருமாநல்லுாரில் உத்தமலிங்கேஸ்வரர் மற் றும் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள் உள்ளன.
இரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று உத்தமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, தலைமை வகித்தார். திருப் பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், இரு கோவில்களிலும் வரும் ஆக., மாதம் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தொடர்ந்து, 9:00 மணி முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூலை மாதம் மூன்றாம் தேதி காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து, இரு கோவில்களிலும் யாகசாலை, முகூர்த்தகால் பூஜை நடைபெறுகிறது.