/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கே.எம்.சி., பள்ளி மாணவியர் 'நீட்' தேர்வில் அபாரம் கே.எம்.சி., பள்ளி மாணவியர் 'நீட்' தேர்வில் அபாரம்
கே.எம்.சி., பள்ளி மாணவியர் 'நீட்' தேர்வில் அபாரம்
கே.எம்.சி., பள்ளி மாணவியர் 'நீட்' தேர்வில் அபாரம்
கே.எம்.சி., பள்ளி மாணவியர் 'நீட்' தேர்வில் அபாரம்
ADDED : ஜூன் 08, 2024 11:28 PM

திருப்பூர்;பெருமாநல்லுார் கே.எம்.சி., பொதுப்பள்ளி மாணவியர், 'நீட்' தேர்வில் அசத்தியுள்ளனர்.
பெருமாநல்லுார் கே.எம்.சி., பொதுப்பள்ளியில், மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான 'நீட்' எழுதிய, மாணவி வைஷ்ணவி, 635 மதிப்பெண்; ஆஷிபா, 624 மதிப்பெண்; வர்ஷா, 485 மதிப்பெண் பெற்றனர்.
வழிகாட்டிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் மனோகரன், பள்ளி தலைமை செயலர் சுவஸ்திகா, பள்ளி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 'நீட் தேர்வுக்கு பயிற்சி நிறுவனங்களை நாடாமல் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்துடன், 'சீக்கர்ஸ்' கல்விக்குழு வாயிலாக, மருத்துவ படிப்பின் மீது ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது.
பள்ளியில் படிக்கும் போதே, வைஷ்ணவி என்ற மாணவி, ஜே.இ.இ., மெயின்ஸ் தேர்வில், 98.42 சதவீத மதிப்பெண் பெற்று, திருப்பூர் மாவட்ட அளவில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,' என்றனர்.