ADDED : ஜூன் 08, 2024 11:27 PM
திருப்பூர்:மழையால், கடந்த பத்து நாட்களாக பூக்கள் வரத்து குறைந்து, மல்லிகை பூ விலை குறைந்து கிலோ, 240 ரூபாய்க்கு விற்றது. 250 கிராம், 60 ரூபாய்க்கு விற்றதால், பலரும் கூடுதலாக பூக்களை வாங்கிச் சென்றனர். இன்று வளர்பிறை வைகாசி முகூர்த்தம் என்பதால், நேற்று காலை முதலே மல்லிகை பூவுக்கு தட்டுப்பாடு நிலவியது. சத்தி, திண்டுக்கல்லில் இருந்து, 10:00 மணிக்கு பூ வந்தவுடன் வாங்கிச் செல்ல மொத்த வியாபாரிகள் போட்டி போட்டனர்.
விற்பனை அதிகரிப்பால், கிலோ, 240 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ விலை திடீரென ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. 250 கிராம், 250 ரூபாய் பரபரப்பாக விற்பனையாகிறது. திருமணம், சுபநிகழ்ச்சிகளுக்கு பூக்களை வாங்க பலரும் பூ மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர்.