ADDED : ஜூன் 10, 2024 02:03 AM
கல்லுாரிக்காலம் மாணவர் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க ஒன்று. அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று துவங்குகிறது. நடப்பு வாரம் முழுதும் கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளிவந்த மே 6ம் தேதி, அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பம் www.tngasa.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மே 24 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், மே, 28 முதல், 30ம் தேதி வரை நடத்தப்பட்டு, இரட்டை இலக்க இடங்கள் அப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இன்றும், முதல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் அரசு கல்லுாரிகளில் நடக்கிறது.
கல்லுாரி அளவில் வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலை கொண்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் இன்று முதல் வரும், 15ம் தேதி வரை ஒரு வாரம் கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
கல்லுாரி பேராசிரியர்கள் கூறுகையில்,'பி.காம்., வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், அறிவியல், படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கட்டாயம் கிடைக்கும். மற்றவர்கள் காத்திருந்து பெற வேண்டும்,' என்றனர்.