ADDED : ஜூன் 10, 2024 02:03 AM
இப்படிச் சொல்கிறது ஒரு கவிதை. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் மீண்டும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடத்தப்படும் குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் 300 முதல் 400 பேர் வரை, பல்வேறு பிரச்னைகள், கோரிக்கைகளுக்காக மனு அளிப்பது வழக்கம்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, குறைகேட்பு கூட்டம் நிறுத்தப்பட்டது. மார்ச் 11ம் தேதிக்குப் பிறகு குறைகேட்புக்கூட்டம் நடத்தப்படவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில், இரண்டு புகார் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் காலத்தில், பொதுமக்கள், அந்த பெட்டிகளில் தங்கள் மனுக்களை போட்டுச்சென்றனர். கடந்த 6ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.
இன்று முதல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் காலத்தில், ஏராளமான
மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டுச்சென்றுள்ளனர். அம்மனுக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கைக்கு சரிவர சென்று சேருமா; அப்படியே அதிகாரிகளில் கைக்கு எட்டினாலும், உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தகமே. தேர்தல் காலத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டிகளில், பொதுமக்களிடமிருந்து எத்தனை மனுக்கள் பெறப்பட்டன; அம்மனுக்களின் நிலை என்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட வேண்டும். புகார் பெட்டியில்
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.