Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சீரழியும் புது பஸ் ஸ்டாண்ட் சீரமைக்க நடவடிக்கை உண்டா?

சீரழியும் புது பஸ் ஸ்டாண்ட் சீரமைக்க நடவடிக்கை உண்டா?

சீரழியும் புது பஸ் ஸ்டாண்ட் சீரமைக்க நடவடிக்கை உண்டா?

சீரழியும் புது பஸ் ஸ்டாண்ட் சீரமைக்க நடவடிக்கை உண்டா?

ADDED : ஜூன் 18, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
அனுப்பர்பாளையம்:திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்ததால் பஸ் ஸ்டாண்ட் எப்போதும் கூட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்பட்டது.

இந்நிலையில், கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் உருவானதில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் அங்கிருந்து, இயக்கப்படுகிறது. இதனால், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, கோபி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

பஸ் ஸ்டாண்டில் அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிற்பது இல்லை. அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் ஒரு பக்கமாக நின்று ஆட்களை ஏற்றி செல்கிறது. பஸ்கள் நிற்காத பகுதிகளில் மாநகராட்சி குப்பை வண்டி, தனியார் வாகனம், வீடற்ற ஏழைகள், குடி மகன்கள் தங்கி வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில், 30 கடைகள் உள்ளது. பஸ் ஒரு பகுதியில் மற்றும் நிற்பதால் அப்பகுதியில் உள்ள கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் உள்ள கடைகள் வியாபாரமின்றி பூட்டி கிடக்கிறது. இதனால் மாநகராட்சிக்கு வரவேண்டிய பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடை வியாபாரிகள் கூறியதாவது:

பரந்து விரிந்து பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிற்காமல் ஒரு பகுதியில் நிற்பதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகளை நம்பி கட்டப்பட்ட கடைகளை ஒப்பந்தம் எடுத்தவர்கள் வியாபாரம் இன்றி பூட்டி விட்டனர். குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை சுகாதாரமின்றி உள்ளது.

சமீபத்தில் தான், பஸ் ஸ்டாண்ட், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து பஸ்களை இயக்கி தேவையற்றவர்களை வெளியேற்றி சீரமைக்க வேண்டும். இதனால், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us