/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாத அதிகாரி காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாத அதிகாரி
காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாத அதிகாரி
காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாத அதிகாரி
காத்திருக்கும் ஆபத்து: கண்டுகொள்ளாத அதிகாரி
ADDED : ஜூன் 18, 2024 11:44 PM

பொங்கலூர்;கொடுவாய் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த மரம் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்தது. அது சமீபத்தில் பட்டு போனது. மரம் பட்டுப் போனதால் அதன் உறுதித்தன்மையை இழந்து நிற்கிறது.
பலத்த காற்று மழைக்கு அது கீழே விழுந்தால் அருகில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு அது பேராபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் கட்டடத்தின் மொட்டை மாடியில் ஆலமரம் துளிர்விட்டு வளர்ந்துள்ளது.
அம்மரம் விரைவில் பெரிதாகி கட்டடத்தின் உறுதித்தன்மையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. எனவே, இவ்விரு மரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.