/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 1,100 மாணவருக்கு 19 ஆசிரியர் போதுமா? கூடுதலாக நியமிக்க மா.கம்யூ., வலியுறுத்தல் 1,100 மாணவருக்கு 19 ஆசிரியர் போதுமா? கூடுதலாக நியமிக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
1,100 மாணவருக்கு 19 ஆசிரியர் போதுமா? கூடுதலாக நியமிக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
1,100 மாணவருக்கு 19 ஆசிரியர் போதுமா? கூடுதலாக நியமிக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
1,100 மாணவருக்கு 19 ஆசிரியர் போதுமா? கூடுதலாக நியமிக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 16, 2024 11:01 PM
திருப்பூர்:அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் நகர மா.கம்யூ., செயலாளர் நந்தகோபால், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலமுரளியிடம் நேற்று மனு அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது:
அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. 50 ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில், 28 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களில் ஒன்பது ஆசிரியர்கள், கலந்தாய்வு மூலம் வேறு பள்ளிகளுக்கு மாறுதலாகி செல்லகின்றனர். அதன்பின், 19 ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்க முடியாது. தமிழாசிரியரே இல்லாத தமிழ் வழி கல்வி கற்பிக்கும் பள்ளியாகவும், அனுப்பர்பாளையம் அரசு பள்ளி மாறியுள்ளது.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இல்லை. போதிய ஆசிரியர் இல்லாததாலேயே, கடந்த 2023 - 24 கல்வியாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் 160 பேர் தோல்வி அடைந்துள்ளனர். எனவே, அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் நியமிக்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.