Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளங்கள்; கழிவுகளால் 'கலங்கும்' விவசாயிகள்

திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளங்கள்; கழிவுகளால் 'கலங்கும்' விவசாயிகள்

திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளங்கள்; கழிவுகளால் 'கலங்கும்' விவசாயிகள்

திறந்தவெளி 'பார்' ஆன பாசன குளங்கள்; கழிவுகளால் 'கலங்கும்' விவசாயிகள்

ADDED : மார் 13, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலை பகுதியிலுள்ள, பெரிய குளம், ஒட்டுக்குளம், அம்மாபட்டி குளம், செட்டி குளம், தினைக்குளம் உள்ளிட்ட ஏழு குளங்கள் பாசனம் வாயிலாக, நேரடியாக, 2 ஆயிரத்து 700 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

சுற்றுப்பகுதியிலுள்ள, 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளை. நகருக்கு அருகில் அமைந்துள்ள இக்குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் வரத்து உள்ள தளி கால்வாயில், தளி பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து நேரடியாக கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.

அதே போல், குப்பை, கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், திருமண மண்டப கழிவுகள் நேரடியாக குளங்களிலும், குளக்கரைகளிலும் கொட்டப்பட்டு வருகிறது.

மேலும், நகருக்கு மிக அருகிலுள்ள பெரிய குளம், ஒட்டுக்குளம், தினைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கவும், உபரி நீர் வெளியேறவும் அமைக்கப்பட்டுள்ள ஷட்டர்கள் மற்றும் கரைப்பகுதிகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஷட்டரிலும், ஒரு கூட்டம், அமர்ந்து, மது அருந்துவது வாடிக்கையாகியுள்ளது.

மது அருந்தி விட்டு, காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர கழிவுகளை ஷட்டர் பகுதியிலேயே வீசிச்செல்கின்றனர்.

அனைத்து கழிவுகளும், குளத்து நீரில், கலந்து மாசு ஏற்படுகிறது; ஷட்டருக்குள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசுவதால், அடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்கும் போது சிக்கல் உருவாகிறது.

மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும், கழிவுகளால், பாதிக்கின்றன. இவ்வாறு, பெரியகுளம், ஒட்டுக்குளம், தினைக்குளம் கரை மற்றும் ஷட்டர் பகுதியில் மட்டும், தற்போது, பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், பாசனம், குடிநீர் ஆதாரமாக உள்ள குளங்களை காக்கவும், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us