Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கரும்பு அரவைக்கு பதிவு விவசாயிளுக்கு அழைப்பு

கரும்பு அரவைக்கு பதிவு விவசாயிளுக்கு அழைப்பு

கரும்பு அரவைக்கு பதிவு விவசாயிளுக்கு அழைப்பு

கரும்பு அரவைக்கு பதிவு விவசாயிளுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 06, 2024 11:49 PM


Google News
திருப்பூர்:கரும்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஆண்டில், அரவைக்கு பதிவு செய்யலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மடத்துக்குளம், கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்ட விவசாயிகள், ஆண்டு தோறும் கரும்பு பதிவு செய்து, அரவைசெய்வதற்காக, ஆலைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆலை மிகவும் பழுதாகியிருப்பதால், விரிவான பராமரிப்பு பணி அவசியமாகி உள்ளது.

இதனால், கடந்த 2023-24ம் ஆண்டில் கரும்பு அரவை நடக்கவில்லை. அரவை பட்டத்துக்கு பதிவு செய்த கரும்புகளை அரவை செய்ய முடியாவிட்டாலும், கொள்முதல் செய்து பிற சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான தொகையும், மிக விரைவாக பட்டுவாடா செய்து முடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும், 2024-25ல் அரவை பட்டத்துக்கு, கரும்பு நடவு துவங்கியுள்ளது. இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், கரும்பு பதிவை துவக்க வேண்டும்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை பராமரித்து, முழு வீச்சில் இயக்கத்துக்கு கொண்டுவர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், இதுதொடர்பாக கோரிக்கை எழுந்தது. அதன் எதிரொலியாக, கரும்பு பதிவு விரைவில் துவங்கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:

கரும்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, கரும்பு அரவைக்கு பதிவு செய்யப்படும். வரும் அரவை பட்டத்தில், அமராவதி ஆலைக்கு பதிவு செய்யப்படும் கரும்பு, பிற ஆலைகளுக்கு பரிமாற்ற அடிப்படையில் அனுப்பி வைக்கப்படும்.

அறுவடை செய்ததும், பிற ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, கரும்பு விவசாய உறுப்பினர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது கரும்பு பயிரை, ஆலையுடன் பதிவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us