/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள் தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்
தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்
தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்
தரம் உயர்த்துவதால் தரம் உயருமா? குழப்பத்தில் ஊராட்சி நிர்வாகங்கள்
ADDED : ஜூலை 06, 2024 11:49 PM
திருப்பூர்;கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் வரும், டிச., மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், 'கிராம ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது' என கூறப்படும் தகவல், ஊராட்சி நிர்வாகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மாநிலத்தில் தற்போது, 490 பேரூராட்சிகள் உள்ள நிலையில், கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்துவதன் வாயிலாக, பேரூராட்சிகளின் எண்ணிக்கை, 700 ஆக உயரும் என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு தெரிவித்திருந்தார்.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. எந்தந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தலாம், எந்தெந்த ஊராட்சிகளை அருகேயுள்ள மாநகராட்சியுடன் இணைக்கலாம் என்பது குறித்த ஆய்வும் நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து, ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறியதாவது:
கிராம ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் கை நழுவும் என்றாலும், வார்டுகளில் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்த முடியும். ஆனால், அருகில் உள்ள நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஊராட்சிகளுக்கு நேரடியாக கிடைத்து வந்த மத்திய அரசு திட்டங்களும், நிதியும் தடைபடும்; வரியினங்கள் அதிகரிக்கும்.
ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், நிதி ஒதுக்கீடு இல்லாமல் திணறி வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதில் கூட சுணக்கம் தென்படுகிறது.
எனவே, பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கலாம். மாறாக, தரம் உயர்த்துவதால், மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுமா என்பது சந்தேகமே.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.