/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமையுங்க ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமையுங்க
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமையுங்க
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமையுங்க
ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகள் அமையுங்க
ADDED : ஜூன் 04, 2024 12:04 AM
உடுமலை:மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில், பிரதிபலிப்பான், மின்விளக்கு வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லையாக மடத்துக்குளம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றுப்பாலமும் செல்கிறது.
இந்த பாலத்தில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால், எந்நேரமும் போக்குவரத்து அதிகளவில் காணப்படும்.
இந்த ஆற்றுப்பாலத்தில் மின்விளக்குகளோ, பிரதிபலிப்பானோ அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பாலத்தை கடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே, இப்பாலத்தில் மின்விளக்கு, பிரதிபலிப்பான் அமைக்க பேரூராட்சியினரும், துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.