ADDED : ஜூலை 29, 2024 10:58 PM
பல்லடம்:மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் நதியா சிறப்புரை ஆற்றினார்.