ADDED : ஜூலை 29, 2024 10:58 PM

அவிநாசி அருகே சேவூரை சேர்ந்த சுதா, மரகதம் உள்பட நான்கு பேர், அளித்த மனு:
சேவூர் ஊராட்சியில், குடிசை வீடு அமைத்து குடியிருந்துவருகிறோம். குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக, கனவு இல்லம் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் வீடு வழங்க கோரி மனு அளித்தோம். எங்கள் பகுதியில், கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வில் குளறுபடிகள் நடக்கின்றன. ஏற்கனவே வீடு உள்ளோரை பயனாளிகளாக இணைக்கின்றனர். வீடுகள் தோறும் கள ஆய்வு நடத்தி, கனவு இல்ல திட்டத்துக்கு தகுதியான பயனாளிகளை சேர்க்கவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பொங்குபாளையத்தை சேர்ந்த முத்தாள் என்பவரும், கனவு இல்ல பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் கூறி மனு அளித்தார்.