/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அதிநவீன பரிசோதனைக் கூடம் பாரத் மைக்ரோ லேப்ஸ் திறப்பு அதிநவீன பரிசோதனைக் கூடம் பாரத் மைக்ரோ லேப்ஸ் திறப்பு
அதிநவீன பரிசோதனைக் கூடம் பாரத் மைக்ரோ லேப்ஸ் திறப்பு
அதிநவீன பரிசோதனைக் கூடம் பாரத் மைக்ரோ லேப்ஸ் திறப்பு
அதிநவீன பரிசோதனைக் கூடம் பாரத் மைக்ரோ லேப்ஸ் திறப்பு
ADDED : ஜூன் 03, 2024 12:56 AM

திருப்பூர்';திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே,எம்.ஜி., புதுார் முதல் வீதியில், 'பாரத் மைக்ரோ லேப்ஸ்' அதிநவீன ரத்தப் பரிசோதனைக் கூடம் திறப்பு விழா நடந்தது.
திருப்பூரில் இயங்கி வரும் பாரத் ஏஜென்சீஸ் நிறுவனம் சார்பில், நவீன கருவிகளுடன் கூடிய, இந்த பரிசோதனைக் கூடத்தை இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் முருகநாதன் ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார்.
கபாடி கழக செயலாளர் 'ஜெயசித்ரா' சண்முகம், சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ராஜ்குமார், கிட்ஸ் கிளப் பள்ளி தாளாளர் மோகன் கார்த்திக், பாரத் மைக்ரோ லேப்ஸ் நிர்வாகத் தலைவர் மாசிலாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.டாக்டர் பானுமதி முருக நாதன், டாக்டர் பாரதி, பாரத் மைக்ரோ லேப்ஸ் ஆலோசகர்கள் கலைவாணி மாசிலாமணி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
இங்கு அதிநவீன, உலகத்தரம் வாய்ந்த கணினி இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஓ., 9001 : 2015 சான்றிதழ் பெற்றுள்ளது.சர்க்கரை, இருதயம், தைராய்டு, கொழுப்பு உள்ளிட்ட மருத்துவ தேவைகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
திறப்பு விழா சலுகையாக வரும் 10ம் தேதி வரை சர்க்கரை பரிசோதனை (ரேண்டம் டெஸ்ட்) ஒரு ரூபாய் என்ற சிறப்பு சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படும்.வீட்டுக்கு வந்து நேரடியாக ரத்த மாதிரிகள் சேகரிக்கும் வசதியும் உள்ளது.
இத்தகவலை பாரத் மைக்ரோ லேப்ஸ் நிறுவனர் அருண்பாரத் தெரிவித்தார்.மேலும் விபரங்களுக்கு, 96267 67678, 0421 -427 1669 என்ற எண்களில் அழைக்கலாம்.