ADDED : ஜூன் 03, 2024 12:55 AM

திருப்பூர் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பினர் பல்வேறு சமுக சேவைகளை செய்து வருகின்றனர்.
திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள தேசிய நகர்புற வீடற்ற ஆதரவற்றோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர் தங்கி உள்ளனர்.
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை அமைப்பினர், இவர்களுக்கு இலவச முடி திருத்தம் மற்றும் முக சவரம் செய்தனர். தேவைப்படுவோருக்கு மொட்டை அடித்தனர். இப்பணியில் அறக்கட்டளை நிறுவனர் தெய்வராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.