/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இடைப்பட்டத்தில் பொரியல்தட்டை கேரளாவில் அதிக வரவேற்பு இடைப்பட்டத்தில் பொரியல்தட்டை கேரளாவில் அதிக வரவேற்பு
இடைப்பட்டத்தில் பொரியல்தட்டை கேரளாவில் அதிக வரவேற்பு
இடைப்பட்டத்தில் பொரியல்தட்டை கேரளாவில் அதிக வரவேற்பு
இடைப்பட்டத்தில் பொரியல்தட்டை கேரளாவில் அதிக வரவேற்பு
ADDED : ஜூன் 18, 2024 10:59 PM

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்கின்றனர். கிணறு மற்றும் போர்வெல்களில், நீர் மட்டம் குறையும் போது, மாற்றுச்சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அவ்வகையில், இவ்வட்டார விவசாயிகளுக்கு பொரியல் தட்டை சாகுபடி கைகொடுக்கிறது. இவ்வகை தட்டை பயறு, கேரளாவில் அதிகளவு விற்பனையாகிறது.
குறைந்த தண்ணீர் தேவை; பராமரிப்பு செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால், பிரதான பட்டங்களில் இல்லாமல், இடைப்பட்டத்தில் இச்சாகுபடி மேற்கொள்கின்றனர். நாள்தோறும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது கிலோ, 15 - 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, கேரள வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்து கொள்கின்றனர். தற்போது தேவை அதிகரித்துள்ளதால், இச்சாகுபடிக்கு நடவு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.