/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவில் வளம் கொள்ளை ஹிந்து முன்னணி கண்டனம் கோவில் வளம் கொள்ளை ஹிந்து முன்னணி கண்டனம்
கோவில் வளம் கொள்ளை ஹிந்து முன்னணி கண்டனம்
கோவில் வளம் கொள்ளை ஹிந்து முன்னணி கண்டனம்
கோவில் வளம் கொள்ளை ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : ஜூலை 24, 2024 06:40 AM
திருப்பூர் : ஹிந்து கோவில்களின் நிலங்களில், 200 கோடி மதிப்பு கனிம வளங்கள் கொள்ளை போனதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் அறிக்கை:
பக்தர்களிடம் பலவித கட்டணங்களை வசூலிக்கும், அறநிலையத் துறை, ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில், 198 கோடியே 65 லட்சத்து 28,000 ரூபாய் மதிப்பு கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கனிம வளங்கள் கொள்ளைபோகும் வரை வேடிக்கை மட்டும் பார்த்த அறநிலையத் துறை யின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் துணையின்றி வளங்கள் கொள்ளையடிக்கபட்டு இருக்க முடியாது.
கோவில்களின், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வளங்களை கொள்ளை யடிக்க துணைபோன அனைத்து அதிகாரிகளையும், அமைச்சரையும் நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இனி, இதுபோல நடைபெறாமல் தடுக்க, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.