/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'குட்கா' விற்பனை அமோகம் நடவடிக்கையில் இல்லை வேகம் 'குட்கா' விற்பனை அமோகம் நடவடிக்கையில் இல்லை வேகம்
'குட்கா' விற்பனை அமோகம் நடவடிக்கையில் இல்லை வேகம்
'குட்கா' விற்பனை அமோகம் நடவடிக்கையில் இல்லை வேகம்
'குட்கா' விற்பனை அமோகம் நடவடிக்கையில் இல்லை வேகம்
ADDED : ஜூலை 03, 2024 02:00 AM
பொங்கலுார்;தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பொங்கலுார் அருகே கண்டியன்கோவில் பகுதியில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இப்பகுதியில் வட மாநில தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் புகையிலைப் பொருட்கள் சுவைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடைக்காரர்களுக்கு கொள்ளை லாபம் கிடைப்பதால் குட்கா விற்பனையை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவற்றை வேறொரு இடத்தில் பதுக்கி வைத்து கேட்பவர்களுக்கு அவ்வப்போது எடுத்து தருகின்றனர்.
சமீபத்தில், மருதுரையான்வலசில் குட்கா விற்பனை செய்வதை அவிநாசிபாளையம் போலீசார் கண்டுகொள்ளாததால் காங்கயம் போலீசார் மூட்டை கணக்கில் குட்காவை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.