Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழைக்காலத்தை வரவேற்று மாணவர்கள் தீட்டிய காவியம்

மழைக்காலத்தை வரவேற்று மாணவர்கள் தீட்டிய காவியம்

மழைக்காலத்தை வரவேற்று மாணவர்கள் தீட்டிய காவியம்

மழைக்காலத்தை வரவேற்று மாணவர்கள் தீட்டிய காவியம்

ADDED : ஜூலை 03, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;மழை காலத்தை வரவேற்கும் வகையில், 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர்கள், குடை ஓவியம் வரைந்து, மழை மற்றும் குடையின் முக்கியத்துவத்தை நேற்று காட்சிப்படுத்தியது.

ஓவியம் என்பது, எண்ணற்ற நிகழ்வுகளையும், வரலாற்றையும், பண்பாடு, கலாச்சாரம், சமூக சீர்திருத்த நிகழ்வுகளையும் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். ஓவியத்தை பார்த்தாலே பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் தீட்டப்பட வேண்டும்.

கடந்த, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, குடையை பயன்படுத்தும் வழக்கம் இருந்துள்ளது. அரசர்கள் உட்பட மேல்தட்டு மக்கள் மட்டும் பயன்படுத்திய குடை, 1750ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. ஆங்கிலேயர்கள், மக்களிடம் குடைகளை கொண்டு சேர்த்துள்ளனர்.

பல்லவ சோழ சிற்ப படைப்புகளில் குடை இடம் பிடித்திருந்தது. மரியாதைக்குரிய நபர்களின் அடையாளமாக குடை பார்க்கப்பட்டது. தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதமாக கூட குடையை பயன்படுத்தியுள்ளனர். எண்ணற்ற நிகழ்வுகளுக்கும், வரலாற்றுக்கும், குடைகளுடன் சம்பந்தம் இருக்கிறது.

குடையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், நிப்ட்-டீ கல்லுாரி மாணவர்களின் குடை ஓவியம் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தது.

தாஜ்மஹால் வரலாறு, ஜப்பான் குண்டு வெடிப்பு, எகிப்து மக்களின் இறப்புக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கை வரலாறு, கிரேக்க நாகரிகம், பேய்கள் உலாவுமிடம், ஹிட்லர் வரலாறு, அலறல், உலக சுகாதார அமைப்பு, சிற்ப ஓவியங்கள், பேஷன் டிசைனின் வரலாறு என, பல்வேறு கருத்துக்களை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

'அப்பேரல் பேஷன் டிசைனிங்' துறை உதவி பேராசிரியர் பூபதி வழிகாட்டுதலுடன், 37 மாணவ, மாணவியர் அடங்கிய குழு, நான்கு நாட்கள் முயற்சித்து, 'அக்ரிலிக்' கலவையில் குடை ஓவியத்தை உருவாக்கியுள்ளனர். கல்லுாரியில் நேற்றை நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், குடை ஓவியங்களை பார்வையிட்டு, பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us