Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கல்லுாரி கலந்தாய்வு ஜூன் 10ல் துவக்கம்

அரசு கல்லுாரி கலந்தாய்வு ஜூன் 10ல் துவக்கம்

அரசு கல்லுாரி கலந்தாய்வு ஜூன் 10ல் துவக்கம்

அரசு கல்லுாரி கலந்தாய்வு ஜூன் 10ல் துவக்கம்

ADDED : ஜூன் 08, 2024 12:25 AM


Google News
உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரி பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன் 10ல் துவங்குகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இத்தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டினர். இதற்கான பணிகளை கல்லுாரி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். பின்னர் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடந்தது.

இந்நிலையில்,உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான இளநிலை மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன் 10 முதல் 13ம்தேதி வரை நடக்கிறது.

இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமாக, 864 இடங்கள் உள்ளன. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு மே 28ம் தேதியில் துவங்கியது. சிறப்பு பிரிவில், 29 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர். பொதுப்பிரிவில் கலை, அறிவியல், வணிகவியல் துறைக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 10ல் நடக்கிறது.

முதல் நாளில் தரவரிசை, 1 முதல் 1,000 வரையிலுள்ள மாணவர்களுக்கு காலையிலும், 1,001 முதல் 2,000 வரை உள்ள மாணவர்களுக்கு மதியமும் நடக்கிறது.

மறுநாள் 11ம் தேதி தரவரிசை, 3,001 முதல் 4,000 வரை உள்ளவர்களுக்கும், வரும் 12ம் தேதி காலையில், தரவரிசை, 4,001 முதல் 5,000 வரை உள்ளவர்களுக்கு காலையிலும், 5,001 முதல் 6,000 வரை உள்ளவர்களுக்கு மதியமும் நடக்கிறது.

இறுதி நாள் 13ம்தேதி காலையில் தரவரிசை, 6,001 முதல் 7,103 வரை உள்ளவர்களுக்கும் மதியம், இலக்கியப் பாடபிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. மாணவர்களின் தரவரிசையை அறிந்துகொள்ள கல்லுாரி இணையதளத்தை பார்வையிடலாம்.

இத்தகவலை, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us