/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதல் நாள் வகுப்புகளுக்கு தயாராகும் அரசு பள்ளிகள் முதல் நாள் வகுப்புகளுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
முதல் நாள் வகுப்புகளுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
முதல் நாள் வகுப்புகளுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
முதல் நாள் வகுப்புகளுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
ADDED : ஜூன் 08, 2024 12:25 AM

உடுமலை;மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் அரசு பள்ளிகள், முதல் நாள் வகுப்புக்கு தயாராக கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வியாண்டு, 2024 - 25 ஜூன் 10ல் துவங்குகிறது. அனைத்து பள்ளிகளிலும் துாய்மைப்பணிகள் மேற்கொண்டு, வகுப்புகளுக்கு தயார்படுத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி பணிகளும், சில பள்ளிகளில் தீவிரமாக நடக்கிறது. மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவினர், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சார்பில், மீண்டும் வகுப்பறைகள் புதுபிக்கப்பட்டும், தரைதளம் உட்பட அனைத்து கட்டமைப்புகளும் சீரமைக்கப்பட்டு புதிய கல்வியாண்டுக்கு தயாராகியுள்ளன.
இப்பள்ளி மட்டுமின்றி, அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் வளாக துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.