Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அதிக பலம் கிடைத்திருக்கிறது: எம்.பி., சுப்பராயன் பேட்டி

அதிக பலம் கிடைத்திருக்கிறது: எம்.பி., சுப்பராயன் பேட்டி

அதிக பலம் கிடைத்திருக்கிறது: எம்.பி., சுப்பராயன் பேட்டி

அதிக பலம் கிடைத்திருக்கிறது: எம்.பி., சுப்பராயன் பேட்டி

ADDED : ஜூன் 05, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
'அதிக பலத்தோடு பார்லிமென்ட்டுக்குள் செல்ல இருப்பதாக திருப்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்தார்.

திருப்பூர் லோக்சபா தொகுதியில், இந்தியகம்யூ., வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார். அவர், மாவட்ட தேர்தல் அலுவலரிடமிருந்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றபின், அவர் கூறியதாவது:

லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்புகள் உண்மையில்லை என்பதை மக்கள் நிரூபித்துவிட்டனர். இந்திய வரலாற்றில் மறக்க முடியாதவர் நேரு. அவரால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பை தகர்க்கின்ற வேலைகளில் ஈடுபடுவோரை, மக்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார்கள். இதனையே, இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. ஜனநாயக அரசியலமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன், பார்லிமென்ட்டில் நாங்கள் சிலராக இருந்தோம்; இன்று சரிசம பலத்துடன் உள்ளே செல்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us