/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேர்தல் பிரிவிடம் இருந்து அரசு கல்லுாரி விடுவிப்பு தேர்தல் பிரிவிடம் இருந்து அரசு கல்லுாரி விடுவிப்பு
தேர்தல் பிரிவிடம் இருந்து அரசு கல்லுாரி விடுவிப்பு
தேர்தல் பிரிவிடம் இருந்து அரசு கல்லுாரி விடுவிப்பு
தேர்தல் பிரிவிடம் இருந்து அரசு கல்லுாரி விடுவிப்பு
ADDED : ஜூன் 05, 2024 10:36 PM
லோக்சபா தேர்தல் நடவடிக்கை முடிவுக்கு வந்ததால், எல்.ஆர்.ஜி., கல்லுாரி, அதன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
திருப்பூர் பல்லடம் ரோட்டில், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு மிக அருகில் இருப்பதால், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இ.வி.எம்., மெஷின், கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்கள் இங்கு இருப்பு வைக்கப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகியுடன் இவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், கல்லுாரி வகுப்புகள், அதே வளாகத்தில் வேறு அறையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் துவங்கியதால், கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையமாக அறிவிக்கப்பட்டது.
மாணவியருக்கு மாற்று ஏற்பாடாக தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒதுக்கப்பட்டது. பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தேர்வுக்கூடமாக மாற்றப்பட்டு, கல்லுாரி மாணவியருக்கான பாரதியார் பல்கலை தேர்வுகள் ஒரு மாதம் நடத்தப்பட்டது.
லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடந்தது. அதன்பின், தேர்தலில் பதிவான இ.வி.எம்., முழுவதும், கல்லுாரியில் வைக்கப்பட்டது. 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ஒன்றரை மாதத்துக்கு மேலாக கல்லுாரி வளாகத்தில் தொடர்ந்தது.
தற்போது ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியிடப்பட்டதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'ஸ்டராங்க் ரூம்' கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர் வசமிருந்த கல்லுாரி, கல்லுாரி நிர்வாகத்திடம் இன்று அல்லது நாளை ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால், மாணவியர் நிம்மதியடைந்துள்ளனர்.