ADDED : மார் 14, 2025 12:51 AM
திருப்பூர்; குண்டடம் ஊராட்சி ஒன்றியம், எல்லப்பாளையம்புதுார், பங்காம்பாளையத்தில் வருவாய்துறையின் சார்பில், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது.
விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிழலி கிராமத்தை சேர்ந்த, 40 பயனாளிகள், குருக்கம்பாளையம், 8, எல்லப்பாளையத்தில், 367 உட்பட, 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், காங்கயம் தாசில்தார் மோகனன், குண்டடம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.