Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொடி கட்டிப்பறக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ;கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

கொடி கட்டிப்பறக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ;கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

கொடி கட்டிப்பறக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ;கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

கொடி கட்டிப்பறக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ;கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

ADDED : ஜூன் 26, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
அவிநாசி;அவிநாசி மற்றும் கிராமப் பகுதிகளில், டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது, சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

அவிநாசி வட்டாரத்தில், 101 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில், ஒரு சில குடும்ப அட்டைதாரர்கள் இலவசமாக வழங்கப்படும் அரிசியை முறையாக பயன்படுத்துகின்ற னர். ஆனால், பெரும்பாலானோர், அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் ஒரு கிலோ, 10 ரூபாய் என விற்று விடுகின்றனர்.

தற்போது, ரேஷன் கார்டுதாரர்களை குறி வைத்து அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள்நேரடியாகவே, ரேஷன் கடை அருகே அமர்ந்து அரிசி வாங்கும் நபர்களிடமிருந்து உடனடியாக பணத்தை கொடுத்து அரிசியை பெற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு வாங்கும் அரிசியை அவிநாசியில் உணவு பொருள் துறைக்கு அரிசியை சப்ளை செய்யும் அரிசி ஆலைக்கு நேரடியாக கொண்டு சென்று கிலோ, 25 ரூபாய் என விற்கின்றனர்.

சாதாரணமாக அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 500 முதல் 700 கிலோ அரிசி வரை விலைக்கு வாங்கி விற் பனை செய்து வருகிறார்.

குறிப்பாக அவிநாசி பேரூராட்சியில், நாராசா வீதி, மடத்துப்பாளையம் - குறுந்தாங்காடு, காசிகவுண்டம்புதுார், சேவூர் ரோடு, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் காலை முதல் மாலை வரை இருந்து அரிசி வாங்கி, மொபட் அல்லது சரக்கு வாகனத்தில் கடத்துகின்றனர்.

நடுவச்சேரி, சேவூர், போத்தம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதி களில் உள்ள கடைகளில் அதிக அளவில் அரிசி கடத்தும் நபர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாலும் ஆய்வுக்கு வருவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

எனவே, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் வருவாய்த்துறையினர் 'பறக்கும் படை' அதிகாரிகள், அவிநாசியில் அன்றாடம் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களையும், அதற்கு உடந்தையாக செயல்படும் ஊழியர்களையும், கள்ள சந்தையில் அரிசி வாங்கும் ஆலையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us