ADDED : ஜூலை 21, 2024 11:46 PM
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், இளைஞர் அணி 45வது ஆண்டு தொடக்க விழா கொடியேற்ற நிகழ்ச்சி அங்கேரி பாளையத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாநகர 9வது வார்டு செயலாளர் ஸ்ரீதர், முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியம், வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டித்துரை, வடக்கு மாநகர மருத்துவரணி துணை அமைப்பாளர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.