ADDED : ஜூலை 21, 2024 11:48 PM

திருப்பூர், லயன்ஸ் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஜெயின் பட்டன் ஹவுஸ் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், டவுன்ஹால், லயன்ஸ் கிளப் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
முகாமில், 291 பேர் பங்கேற்றனர். 49 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். ஜெயின் பட்டன் ஹவுஸ் உரிமையாளர் நியாமிசந்த் முகாமுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தார். லயன்ஸ் கிளப் சங்க தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் பரசிவம், பொருளாளர் கோபிநாத் ஒருங்கிணைத்தனர். அடுத்த முகாம், ஆக., 18ல் நடக்கிறது.