Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிரம்பும் அணைகள்; விவசாயம் செழிக்குமா?

நிரம்பும் அணைகள்; விவசாயம் செழிக்குமா?

நிரம்பும் அணைகள்; விவசாயம் செழிக்குமா?

நிரம்பும் அணைகள்; விவசாயம் செழிக்குமா?

ADDED : ஜூன் 30, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
பரம்பிக்குளம், ஆழியாறு திட்ட அணைகள் நிரம்புகின்றன. திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி. பி.ஏ.பி., திட்டத்தில், தேவைக்கேற்ப நீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பது கடைமடை விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

மழைநீரை ஆதாரமாக கொண்டு, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் (பி.ஏ.பி.,) கீழ் உள்ள அணைகள் நிரம்புகின்றன. இந்தாண்டு கோடை மழை பெய்து முடித்த நிலையில், தற்போது தென் மேற்கு பருவமழையும் பெய்து வருகிறது; இதனால், அணைகள் நிரம்பி வருகின்றன. அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.திருப்பூர் மாவட்டம் காங்கயம், வெள்ளகோவில் பகுதிகள் தான் கால்வாயின் கடைமடையாக உள்ளன. இங்குள்ள விவசாயிகள், பல்வேறு பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பாசனப் பகுதியை, 4 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கு, 100 முதல், 130 நாள் என, 7 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுவது வழக்கம். 'சில ஆண்டுகளாக மிகக்குறைந்தளவு மட்டுமே நீர் திறந்து விடப்படுகிறது' என்பது அப்பகுதி விவசாயிகளின் புகார்.

வாக்காளர் பட்டியல் காலாவதி

இரண்டு ஆண்டுகள் கடந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஏ.பி., பாசன அமைப்புக்கு பயிற்சி வழங்கப்படவில்லை. நீர்பாசன மேலாண்மையில் பாசன சபையின் பங்கு மற்றும் பொறுப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது. பி.ஏ.பி., பாசன சபைகளின் வாக்காளர் பட்டியல் காலாவதியாகியிருக்கிறது. இறந்தவர்களின் பெயர், 20 சதவீதம் அளவுக்கு உள்ளது. நிலத்தை வீட்டுமனையாக மாற்றியவர்களும் உள்ளனர். விவசாய நிலத்தை மாற்று பயன்பாட்டுக்கு வழங்கியவர்கள், விவசாய நிலமே இல்லாதவர்களின் பெயர் கூட உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைபாடுகள் களையப்பட வேண்டும்.

----

பொள்ளாச்சி பக்கம் ஜூன் 28 படம்

----

நீர்மட்டம் உயர்ந்துவரும் பரம்பிக்குளம் அணை

சோலையாறு அணை

பிரதான கால்வாயில் நீரிழப்பு எவ்வளவு?

பாசன கால்வாயில் நீர் திருட்டு காரணமாக, நீர் வினியோகம் வெகுவாக குறைந்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகளின் கணக்கெடுப்புப்படி, 2,900 நீர் திருட்டு தொடர்பான விதிமீறல் இருந்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து ஆயக்கட்டுதாரர்களுக்கும், சமமான நீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படுவதில்லை. சில பகுதி மடைகளுக்கு, 5 நாள்; சில பகுதி மடைகளுக்கு, 7 நாள்; சில இடங்களுக்கு, 2 நாள் மட்டுமே நீர் வினியோகம் செய்யப்படுகிறது. பிரதான கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. பல இடங்களில் பிரதான வாய்க்காலும், உப பகிர்மான வாய்க்கால்களும் சிதிலமடைந்துள்ளன. பிரதான கால்வாயில் எவ்வளவு நீரிழப்பு ஏற்படுகிறது என, கடந்த ஐந்தாண்டாக வலியுறுத்தி வருகிறோம்; விளக்கம் தர மறுக்கின்றனர். இக்குறைகளை களைந்து, வரும் நாட்களில் சீரான நீர் வினியோகம் செய்ய வேண்டும்.- வேலுசாமி,பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க தலைவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us