/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள் கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள்
கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள்
கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள்
கருகும் தென்னைகள்; மருகும் விவசாயிகள்
ADDED : ஜூன் 30, 2024 12:16 AM

மழை எங்கெங்கோ பெய்தாலும், பொங்கலுார் வட்டாரத்திலோ, குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. கடும் வெயில் வாட்டியதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. வைகாசி பட்டம் துவங்கி உள்ள போதிலும் பெரும்பாலான விவசாயிகள் பயிர் சாகுபடியை கைவிட்டுள்ளனர்.
தென்னை மரங்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். பல இடங்களில் புதிது புதிதாக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகின்றனர். ஆனாலும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. தென்னை மரங்கள் குற்றுயிரும், குலை உயிருமாக காட்சியளிக்கின்றன.
மழைக்காலம் துவங்க இரண்டு மாதங்கள் உள்ளது. அதுவரை தென்னையை காப்பாற்றுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தென்னையை காப்பாற்ற பாக்கி உள்ள பி.ஏ.பி., தண்ணீரை கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.