/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சரமாரியாக குறைகளை அடுக்கிய விவசாயிகள் சரமாரியாக குறைகளை அடுக்கிய விவசாயிகள்
சரமாரியாக குறைகளை அடுக்கிய விவசாயிகள்
சரமாரியாக குறைகளை அடுக்கிய விவசாயிகள்
சரமாரியாக குறைகளை அடுக்கிய விவசாயிகள்
ADDED : ஜூன் 29, 2024 01:39 AM
திருப்பூர்;குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக குறைகளை அடுக்கினர்.
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:
தாமரைக்குளம் ஆக்கிரமிப்பு
ஈஸ்வரன், மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்:
அவிநாசி தாமரைக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அவிநாசி புதுப்பாளையம் அருகே மான்களால் விவசாய பயிர்கள் அழிக்கப்படுகின்றன; மயில்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது. கால்நடைகள், ஆடுகளை தாக்கும் வெறிநாய்களால் நஷ்டம் ஏற்படுகிறது. வெறி நாயைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மதுக்கடை திறக்கக்கூடாது
காளிமுத்து, தலைவர், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்:
தாராபுரம் அக்கரைப்பாளையம் மின் அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில், காற்றில் உரசி விபத்து ஏற்படுகிறது; மின் பணியாளர்கள் உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பதில்லை. வடுகபாளையம், கோவில்பாளையம் ரோட்டை சீரமைக்க வேண்டும். சூரியநல்லுார் ஊராட்சி, இடையன்கிணறு பகுதியில், மதுக்கடை திறக்க அனுமதிக்கக்கூடாது. உப்பாற்றில், ஆலாம்பாளையம் அருகே, மழைநீரை தேக்க தடுப்பணை அமைக்க வேண்டும்.
கரும்பு அரவைக்குப் பதிவு
பாலதண்டபாணி, செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நம்பி, கரும்பு விவசாயிகள் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ஆலையை மீண்டும் சீரமைக்க, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மீண்டும் கரும்பு அரவைக்கு பதிவு செய்ய வேண்டும்.
ஆடுகளை கொல்லும் நாய்கள்
வேலுசாமி, தலைவர், வெள்ளகோவில் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்கம்:காங்கயம் சுற்றுப்பகுதிகளில், ஆடுகளை வெறிநாய்கள் தாக்குவது அதிகரித்துள்ளது. வெறிநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இழப்பீடு வழங்க வேண்டும்.
குளத்துக்கு தடைபடும் தண்ணீர்
குமார், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:ஊத்துக்குளி அணைப்பாளையம் குளத்துக்கு, நொய்யல் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது, அணைப்பாளையத்துக்கு தண்ணீர் வருவது தடைபடுகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து குளத்துக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும்.