/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது
வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது
வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது
வெள்ளகோவிலில் புத்தகத் திருவிழா துவங்கியது
ADDED : ஜூன் 29, 2024 01:40 AM

வெள்ளகோவில்;வெள்ளகோவில், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, ஆர்.பி.எஸ்., மஹாலில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 5வது புத்தக திருவிழா, நேற்று துவங்கியது. அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், துவக்கி வைத்தார். வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் தலைவர் செல்வகுமார், ஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி தாளாளர் பரிமளம், புனித அமல அன்னை மெட்ரிக் தாளாளர் ெஹலன் ரூபி ஆகியோர் பேசினர். புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஆதி நன்றி கூறினார்.
முதல் நாளில், 3,000க்கும் மேற்பட்டவர்கள் கண்காட்சியில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கி சென்றனர்.கண்காட்சி, ஐந்து நாட்கள் நடக்கிறது.
மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''40 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
வெள்ளகோவில் ஒன்றிய பகுதிகளில் உள்ள, 86 அரசு பள்ளிகள், 14 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரையும் புத்தக கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். வாகன வசதி செய்து கொடுத்துள்ளோம்.
96 பள்ளிகளில் இருந்து, 14 ஆயிரம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாலை நேரங்களில் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது; குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன'' என்றார்.