ADDED : ஜூலை 20, 2024 11:06 PM
திருப்பூர்;திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில், நேற்று, 14 கிலோ எடை கொண்ட சிறிய பெட்டி, 500 முதல் 700 ரூபாய். கடந்த வாரம் பெட்டியின் விலை, 800 ரூபாயை கடந்திருந்ததால், மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி, 70 முதல், 75 ரூபாய்க்கு விற்றது. நேற்று பெட்டிக்கு, 200 ரூபாய் வரை விலை குறைந்ததால், ஒரு கிலோ, தக்காளி, 50 ரூபாய். இரண்டாம் ரகம், 40 ரூபாய்க்கு விற்றது.
தக்காளி வியாபாரிகள் கூறுகையில்,' துாறல் மழை காரணமாக உள்ளுர் வரத்து பாதித்திருந்தது. கடந்த நான்கு நாட்களாக மழை இல்லை. கர்நாடாகவில் மழை குறைந்து, மைசூரு தக்காளி வரத்து மெல்ல இயல்புக்கு திரும்புகிறது. ஒரே நேரத்தில் உள்ளூர், வெளிமாநில தக்காளி இரண்டு வரத்தும் அதிகரித்ததால், மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து விட்டது. தற்போதைக்கு ஆடி மாதம் முகூர்த்த தினம் இல்லாததால், விற்பனை சற்று மந்தமாக உள்ளது. ஆகையால், விலை இறங்குமுகமாக உள்ளது,' என்றனர்.