/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தெற்கு தொகுதியில் சுப்பராயனுக்கு கூடுதல் ஓட்டு தெற்கு தொகுதியில் சுப்பராயனுக்கு கூடுதல் ஓட்டு
தெற்கு தொகுதியில் சுப்பராயனுக்கு கூடுதல் ஓட்டு
தெற்கு தொகுதியில் சுப்பராயனுக்கு கூடுதல் ஓட்டு
தெற்கு தொகுதியில் சுப்பராயனுக்கு கூடுதல் ஓட்டு
ADDED : ஜூன் 05, 2024 12:26 AM
திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியில், வேட்பாளர் சுப்பராயனுக்கு முந்தை தேர்தலை விட கூடுதலான ஓட்டுகள் கிடைத்துள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., சார்பில் களம் இறங்கிய சுப்பராயன், இத்தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்கி, 2வது முறையாக வெற்றியைக் கைப்பற்றியுள்ளார்.கடந்த தேர்தல்களில் பெற்ற ஓட்டுகள் மற்றும் நடப்பு தேர்தலில் பெற்ற ஓட்டுகள் குறித்து கட்சியினர் ஒப்பீடு செய்து அலசுகின்றனர்.
அதன் விவரம்:
கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்தில் கட்சிகள் பல்வேறு கூட்டணிகளாக களம் இறங்கியது. இதில் அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் காங்., கட்சிகள் தனித்து களம் இறங்கின. இரு கம்யூ., கட்சிகளும் இணைந்து களம் கண்டன. பா.ஜ., தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தது.
இந்த தேர்தலின் போது கம்யூ., கூட்டணியில் சுப்பராயன் இந்திய கம்யூ., சார்பில் இத்தொகுதியில் முதன் முறையாக களம் இறங்கினார். இதில் 33,331 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இந்த தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுதியில் இவர் பெற்றது 7,773 ஓட்டுகள்.
அடுத்தாக 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் சுப்பராயனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 5,08,725 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுதியில் அவர் பெற்றது, 77,807 ஓட்டுகள். கூட்டணி பலம் காரணமாக 10 மடங்கு அதிக ஓட்டுகள் அவருக்கு கிடைத்தது.
சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டு
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, இதே கூட்டணியில், திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ் 75,535 ஓட்டுகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். முந்தைய லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் குறைந்துள்ளது.