/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.2.50 லட்சம் வழிப்பறி மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.2.50 லட்சம் வழிப்பறி
மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.2.50 லட்சம் வழிப்பறி
மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.2.50 லட்சம் வழிப்பறி
மதுக்கடை ஊழியரை தாக்கி ரூ.2.50 லட்சம் வழிப்பறி
ADDED : ஜூன் 05, 2024 12:27 AM
திருப்பூர்:திருப்பூர் - தாராபுரம் ரோடு, சந்திராபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை (எண்:1898) உள்ளது.
ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அன்றைய மதுவிற்பனை பணத்தை கண்காணிப்பாளர் திருப்பூர் வெள்ளியங்காடு, பெரிச்சிபாளையத்தை சேர்ந்த தனபால், 41 என்பவர் டூவீலரில் எடுத்து கொண்டு திரும்பி கொண்டிருந்தார்.
கடையில் இருந்து, 200 மீட்டர் துாரம் சென்ற நிலையில், இருளான பகுதியில் மறைந்து இருந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் தனபாலை வழிமறித்தனர்.
கத்தி முனையில் அவரை மிரட்டி, மதுவிற்பனை பணம் 2.50 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு, அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு சென்றனர். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவை நல்லுார் போலீசார் பார்வையிட்டு வருகின்றனர்.