/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி நாளை துவக்கம் கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி நாளை துவக்கம்
கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி நாளை துவக்கம்
கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி நாளை துவக்கம்
கட்டட கட்டுமான பொருள் கண்காட்சி நாளை துவக்கம்
ADDED : ஜூலை 18, 2024 12:07 AM

திருப்பூர் : திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நாளை துவங்குகிறது.
திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சங்க அலுவலகத்தில் கட்டட கட்டுமான கண்காட்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கண்காட்சி தலைவர் ஜனார்த்தனன், சங்கத் தலைவர் அருண் கே.ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:
வெள்ளிவிழா காணும் எங்களது சங்கம் சார்பில், 19வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, 19-ம் தேதி துவங்கி, 22-ம் தேதி வரை, தினமும், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை தாராபுரம் ரோட்டில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கண்காட்சியை திறந்து வைக்கிறார். எம்.பி., சுப்பராயன் வாழ்த்துரை வழங்குகிறார். எம்.எல்.ஏ., செல்வராஜ் 'பொறியியல் பொக்கிஷம்' மலரை வெளியிட, மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொள்கிறார். துணை மேயர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
கண்காட்சியில் தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள கட்டட கட்டுமான பொருட்கள் தயாரிப்பிலும், விற்பனையிலும் சிறந்து விளங்கும், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள், மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரானைட், மார்பிள்ஸ், அலங்கார விளக்குகள், 'சிசிடிவி' கேமரா, மாடர்ன் ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகைகள், கண்ணாடி வகைகள், புதிய பெயின்ட் வகைகள், நியூ பாத் பிட்டிங்ஸ் என பல புதுமைகளை கொண்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
தினமும், மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கண்காட்சியின் நோக்கம் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை கட்டுமான உபகரணங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளை நமது பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்துவதுடன் தொழில்நுட்ப அறிமுகங்களையும் கட்டுமான பொருட்களின் தரத்தையும் உயர்த்துவதே ஆகும்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் சந்தித்து தமது தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வது வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக அமையும். எனவே, அனைவரும் கண்காட்சியில் பங்கேற்க அழைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சங்க செயலாளர் ஜார்ஜ் லியோ ஆனந்த், கண்காட்சி செயலாளர் கவுதம், பொருளாளர் சம்பத்குமார், உடனடி முன்னாள் தலைவர் ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.