/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில பில்லியர்ட்ஸ் போட்டி 'ரேங்கிங்' பெற உற்சாகம் மாநில பில்லியர்ட்ஸ் போட்டி 'ரேங்கிங்' பெற உற்சாகம்
மாநில பில்லியர்ட்ஸ் போட்டி 'ரேங்கிங்' பெற உற்சாகம்
மாநில பில்லியர்ட்ஸ் போட்டி 'ரேங்கிங்' பெற உற்சாகம்
மாநில பில்லியர்ட்ஸ் போட்டி 'ரேங்கிங்' பெற உற்சாகம்
ADDED : ஜூலை 26, 2024 11:48 PM

திருப்பூர்;தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் அசோசியேஷன், திருப்பூர், 43 சோல்ஸ் ஸ்னுாக்கர் அகாடமி சார்பில், தமிழ்நாடு சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் ஆண்கள் பிரிவுக்கான மாநில ரேங்கிங் சாம்பியன்ஷிப் போட்டி, திருப்பூர் லட்சுமி நகரில் நேற்று துவங்கியது.
போட்டிகளை ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரன் துவக்கி வைத்தார். மாநில பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் அசோசியேஷன் தலைவர் முரளிதரன், ஆங்கிலோ அமெரிக்கன் ெஹப் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சுனில்மேத்யூஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நான்கு நாட்கள் நடக்கும் இப்போட்டியில், மாநிலம் முழுதும் இருந்து, 113 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று, சப் ஜூனியர், ஜூனியர் பிரிவுக்கான, 21 போட்டிகள் நடந்தது. திருப்பூர் 43 சோல்ஸ் ஸ்னுாக்கர் அகாடமி தலைவர் சினோஷ் வில்லியம்ஸ், செயலாளர் லோகநாதன் ஒருங்கிணைத்தனர்.
---------------------
திருப்பூரில் நேற்று துவங்கிய சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவுக்கான மாநில ரேங்கிங் சாம்பியன்ஷிப் போட்டியில் உற்சாகத்துடன் விளையாடிய வீரர்.