/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கிரீன் டேக்' கிடைக்குமா? செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு... திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு 'கிரீன் டேக்' கிடைக்குமா? செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு... திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
'கிரீன் டேக்' கிடைக்குமா? செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு... திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
'கிரீன் டேக்' கிடைக்குமா? செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு... திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
'கிரீன் டேக்' கிடைக்குமா? செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு... திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 26, 2024 11:47 PM

திருப்பூர்;'செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 'கிரீன் டேக்'
வழங்க வேண்டும்,'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்
சுப்பிரமணியன் பேசினார்.
பிர்லா செல்லுலோஸ், ஆதித்யா பிர்லா குழுமம் சார்பில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கான பைபர், நுால், துணி உற்பத்தி மற்றும் சேவை தொடர்பான கருத்தரங்கு நடந்தது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடந்த கருத்தரங்கில், பருத்திக்கு மாற்றாக, ஆதித்யா பிர்லா நிறுவனம் வழங்கி வரும், பைபர், நுால் மற்றும் துணி ரகங்கள் குறித்து விளக்கப்பட்டது.
'விஸ்கோஸ்', 'மொடால்', 'எக்ஸல்' 'லயோசெல்', மூங்கில் போன்ற பைபர், நுால் மற்றும் துணி உற்பத்தி முறைகள் குறித்தும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கான தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து, 'பவர்பாயின்ட்' வாயிலாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருப்பூர் ஏற்றுமதியளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு, பைபர், நுால் மற்றும் துணியை, ஆதித்யா பிர்லா நிறுவனம் வழங்கி வருகிறது. பருத்தியை மட்டுமே சார்ந்திருக்காமல், செயற்கை நுாலிழை உற்பத்திக்கு மாறி வருகிறோம். பிர்லா நிறுவனம், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு தேவையான, வளம் குன்றா வளர்ச்சி நிலை கோட்பாட்டில் தயாரிக்கப்பட்ட, பைபர், நுால் மற்றும் துணியை வழங்கி வருகிறது.
ஆத்யா பிர்லா நிறுவனம், பூமிக்கு பாதிப்பில்லாத ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 'கிரீன் டேக்' வழங்கி சிறப்பு செய்தால், சர்வதேச சந்தையிலும் தனி அந்தஸ்து கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.