/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜம்மனை ஓடையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு ஜம்மனை ஓடையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு
ஜம்மனை ஓடையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு
ஜம்மனை ஓடையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு
ஜம்மனை ஓடையில் முளைக்கும் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:42 AM

திருப்பூர்;ஜம்மனை ஓடையில் துார் வாரும் பணி ஒரு புறம் நடந்து வரும் நிலையில், ஓடைக்கரையை மறித்து கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
திருப்பூர் நகரின் மையத்தில் கடந்து செல்லும் நொய்யல் ஆற்றுக்கு, ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம், சபரி ஓடை, சேனாதி பள்ளம் உள்ளிட்டவை நீராதாரங்களாக உள்ளன. இதில் ஜம்மனை ஓடை தென்னம்பாளையம் வழியாக கடந்து வருகிறது. இதில் தற்போது மழைக்காலத்தை ஒட்டி துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஓடையானது தென்னம்பாளையம் பகுதியைக் கடந்து உழவர் சந்தை, ஏ.பி.டி., ரோடு வழியாக மங்கலம் ரோட்டைக் கடந்து நொய்யலில் சேருகிறது. இதில் உழவர் சந்தை அருகே பிரதான ரோட்டைக் கடந்து செல்லும் இடத்தில் உயர் மட்டப் பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே ஓடையின் கரையில் தற்போது சிலர் நிரந்தரமாக கடைகள் அமைத்துள்ளனர்.
கரையோரம் இருந்த இந்த ஆக்கிரமிப்புகள் தற்போது ஓடையை மறித்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓடை வழிப்பாதை குறுகலாகிறது. மேலும், ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து வரும் போது, எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி, நீர்வழிப் பாதையை காப் பாற்ற வேண்டும்.