/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்னையில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி தென்னையில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
தென்னையில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
தென்னையில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
தென்னையில் மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி
ADDED : ஜூலை 31, 2024 02:37 AM

உடுமலை;தென்னை சாகுபடியில், செலவினங்களை குறைத்து, மகசூலை அதிகரிக்க, இயற்கை வேளாண் முறைகளை பின்பற்றலாம் என, தோட்டக்கலைத்துறை செயல்விளக்க பயிற்சியில் இயற்கை விவசாயி நடராஜன் தெரிவித்தார்.
குடிமங்கலம் ஒன்றியம், புக்குளம் கிராமத்தில், தோட்டக்கலைத்துறை சார்பில், தென்னை சாகுபடி தொழில்நுட்ப செயல்விளக்க பயிற்சி நேற்று நடந்தது.
தோட்டக்கலை அலுவலர் சிவானந்தன் வரவேற்றார். புக்குளத்தைச்சேர்ந்த விவசாயி நடராஜன், தென்னையில், இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து பேசியதாவது:
தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளை, தீ வைத்து எரிக்காமல், அவற்றை உரமாக பயன்படுத்த முடியும். குறிப்பாக, மட்டை மற்றும் உரிமட்டைகளை, அரைத்து, தோப்பு முழுவதும் மூடாக்காக பயன்படுத்தலாம்.
இதனால், மண் வளம் பெறுவதுடன், வெப்ப காலங்களில், தண்ணீர் ஆவியாவது தவிர்க்கப்படும்.; களைகளையும் முழுமையாக கட்டுப்படுத்தலாம். மேலும், வரப்பு ஓரங்களில் மரங்களை வைத்து பராமரிப்பது பல்வேறு நலன்களை தரும்.
அதிக உப்பு தண்ணீரால், சொட்டு நீர் பாசன குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்க, கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியே வரும், மெயின் லைனில், 'கோலி குண்டு' போன்ற உருட்டு கற்களை பயன்படுத்தி வருகிறேன்.
இந்த தொழில்நுட்பத்தால், நுண்ணீர் பாசன குழாய்களிலும், அடைப்பு ஏற்படுவதில்லை. இயற்கை வேளாண் முறையால், உரச்செலவினங்களை குறைப்பதுடன் கூடுதல் மகசூலும் பெறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து கொய்யா, பலா, மூங்கில் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு நேரடி விளக்கமளிக்கப்பட்டது. புக்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.