/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் வழிப்பறி; விற்பனையாளர்களிடம் விசாரணை டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் வழிப்பறி; விற்பனையாளர்களிடம் விசாரணை
டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் வழிப்பறி; விற்பனையாளர்களிடம் விசாரணை
டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் வழிப்பறி; விற்பனையாளர்களிடம் விசாரணை
டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் வழிப்பறி; விற்பனையாளர்களிடம் விசாரணை
ADDED : ஜூன் 05, 2024 11:05 PM
திருப்பூர் : திருப்பூரில், 'டாஸ்மாக்' மதுக்கடை சூப்பர்வைசரிடம், 2.50 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தது தொடர்பாக, கடை விற்பனையாளர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, சந்திராபுரத்தில், 'டாஸ்மாக்' மதுக்கடை (எண்:1898) உள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு மது விற்பனை பணத்துடன் கடையின் சூப்பர்வைசர் தனபால், 41 டூவீலரில் சென்று கொண்டிருந்தார். மதுக்கடையில் இருந்து, 200 மீட்டர் துாரத்தில் வழிமறித்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், தனபாலை தாக்கி கத்தி முனையில், 2.50 லட்சம் ரூபாயை பறித்து சென்றது. புகாரின் பேரில், நல்லுார் போலீசார் விசாரித்தனர்.
தனபால் டூவீலரில் புறப்பட்டதும், அவர்களும் அவர் பின்னால் கிளம்பினர். சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடமும், போலீசார் விசாரித்தனர்.
பணம் வழிப்பறி தொடர்பாக, கடையின் விற்பனையாளர்கள் இருவர் உள்ளிட்டோரிடம் விசாரித்தனர்.
தனபாலை அன்றாடம் நோட்டமிட்டு, அவர் பணம் எடுத்து வருவதை உறுதி செய்த பின், வழிப்பறியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வழிப்பறி நடந்த இடம் இருட்டாக இருந்த காரணத்தால், சுற்றுவட்டார வீதிகளில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை போலீசார் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.