ADDED : ஜூன் 14, 2024 12:06 AM
அனுப்பர்பாளையம்: ஈரோடு மாவட்டம், கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி, 60, மனைவி செல்வராணி, 50. தம்பதியர், காரில் கோவை சென்றுவிட்டு நேற்று ஈரோடு திரும்பி கொண்டிருந்தனர்.
பெருமாநல்லுார் அருகே கருக்கன்காட்டுபுதுார் அருகே சென்றபோது, நிலை தடுமாறி டிவைடரில் மோதியது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் கார் மீது மோதியது.
இதில், கார் கவிழ்ந்து, தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.