/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அதிநவீன இயந்திரங்கள், அக்ஸசரீஸ்; அணிவகுக்கும் 'நிட்சோன்' கண்காட்சி இன்று துவங்குகிறது அதிநவீன இயந்திரங்கள், அக்ஸசரீஸ்; அணிவகுக்கும் 'நிட்சோன்' கண்காட்சி இன்று துவங்குகிறது
அதிநவீன இயந்திரங்கள், அக்ஸசரீஸ்; அணிவகுக்கும் 'நிட்சோன்' கண்காட்சி இன்று துவங்குகிறது
அதிநவீன இயந்திரங்கள், அக்ஸசரீஸ்; அணிவகுக்கும் 'நிட்சோன்' கண்காட்சி இன்று துவங்குகிறது
அதிநவீன இயந்திரங்கள், அக்ஸசரீஸ்; அணிவகுக்கும் 'நிட்சோன்' கண்காட்சி இன்று துவங்குகிறது
ADDED : ஜூன் 14, 2024 12:06 AM
திருப்பூர்: திருப்பூரில், இன்று 'நிட்சோன்' கண்காட்சி துவங்குகிறது. பின்னலாடை துறை மேம்பாட்டுக்கு உதவ அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயந்திரங்கள், அக்ஸசரீஸ் இடம் பெறுகிறது.
பின்னலாடை துறை சார்ந்த 'நிட்சோன்' கண்காட்சி, இன்று, (14ம் தேதி) காலை 10:00 மணிக்கு, திருப்பூர் வேலன் ஓட்டல் வளாகத்தில் நடக்கிறது. 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, சைமா தலைவர் ஈஸ்வரன் தலைமை வகிக்கின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், கண்காட்சியை துவக்கி வைக்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் ஜெயசித்ரா சண்முகம் முன்னிலை வகிக்கின்றனர்.
'டாஸ்மா' தலைவர் அப்புக்குட்டி, 'நிப்ட்-டீ' கல்லுாரி முதன்மை பயிற்றுனர் சண்முகம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்தி ராஜன், 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், எம்ப்ராயட்ரி அசோஸியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன், 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், 'டிப்' தலைவர் மணி, 'டீமா' தலைவர் முத்துரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கண்காட்சி, நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) நடக்கிறது.