/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிக்கண்ணா கல்லுாரியில் நாளை கவுன்சிலிங் சிக்கண்ணா கல்லுாரியில் நாளை கவுன்சிலிங்
சிக்கண்ணா கல்லுாரியில் நாளை கவுன்சிலிங்
சிக்கண்ணா கல்லுாரியில் நாளை கவுன்சிலிங்
சிக்கண்ணா கல்லுாரியில் நாளை கவுன்சிலிங்
ADDED : ஜூலை 07, 2024 10:50 PM
திருப்பூர்:திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:
சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், இளநிலைப் பட்ட வகுப்புகளில் சேர மே, 30 முதல் ஜூன், 15 வரை முதல் கட்ட கவுன்சிலிங், ஜூன், 24 முதல், 29 வரை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது. கூடுதலாக சில இடங்கள் தமிழ் இலக்கியம், வணிகவியல் (பி.காம்), சர்வதேச வணிகவியல் (பி.காம் ஐ.பி.,) ஆகிய பாடப்பிரிவுகளில் தமிழக அரசால் பெறப்பட்டுள்ளன. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல்(ஷிப்ட் 2) ஆகிய பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இதுவரை விண்ணப்பிக் காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் tngasa.in இணையதளத்தில் புதிதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கல்லுாரியில் மொத்தமுள்ள, 808 இடங்களில், இருகட்ட கவுன்சிலிங்கில், 765 இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள, காலி இடங்களுக்கு, இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நாளை (9 ம் தேதி) நடைபெற உள்ளது. வணிகவியல் தரவரிசை, 3,025 முதல் 4,000 வரை உள்ளவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.